புதன், 21 ஆகஸ்ட், 2013

கேழ்வரகு VS நெல்லரிசி,கோதுமை






கேழ்வரகு(100கி)
நெல்லரிசி(100கி)
கோதுமை(100கி)
புரதம் (கி)
7.3
6.5
11.8
கெ¡ழுப்பு (கி)
1.3
0.8
1.5
தாது உப்புகள் (கி)
2.7
0.6
1.5
நார்ச்சத்து (கி)
3.6
0.2
1.2
மாவுச்சத்து (கி)
72.0
78.2
71.2
கால்சியம் (மி.கி)
344
10
41
பாஸ்பரஸ் (மி.கி)
283
160
306
இரும்புச்சத்து (மி.கி)
3.9
0.7
5.3
National institute of Nutrition, Hyderabad.



வியாழன், 15 ஆகஸ்ட், 2013

கேழ்வரகு லட்டு



கேழ்வரகு லட்டு


கேழ்வரகு மாவு           - 1 ஆழக்கு
வெல்லம்                    - 2 ஆழக்கு (துருவியது)
நெய்                          - 3 மேசைக்கரண்டி
முந்திரி                      - 1 தேக்கரண்டி
திராட்சை                   - 1 தேக்கரண்டி
ஏலக்காய் தூள்            - 1 சிட்டிகை
சுக்கு தூள்                 - 1 சிட்டிகை

செய்முறை
·         கேழ்வரகு மாவை இளஞ்சூடாக சிறிது நேரம் வறுத்தேடுத்து, சூடாக இருக்கும் போதே வெல்லம், நெயில் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் தூள், சுக்கு தூள் ஆகியவற்றை நன்கு கலந்து உரண்டைகளாக பிடிக்கவும்.
·         சுண்ணாம்பு, இரும்பு, புரதம் நிறைந்த லட்டு தயார்.

புதன், 7 ஆகஸ்ட், 2013

கேழ்வரகு இட்டவி(இட்லி)



கேழ்வரகு இட்டவி(இட்லி)
கேழ்வரகு           - 1 ஆழக்கு


உளுந்து             - 1/4 ஆழக்கு
வெந்தையம்                - 1 தேக்கரண்டி
உப்பு                 - தேவையானளவு.
செய்முறை-
·         கேழ்வரகு, உளுந்து, வெந்தையம் தனித்தனியாக ஊற விட்டு, இட்லி மாவாக அரைத்துக்கெ¡ள்ளவும்.
·         அரைத்த மாவுடன் உப்பு சேர்த்து கலந்து இரவுமுலுக்க புளிக்க விடவும்.
·         புளித்த மாவை இட்லியாக ஆவியில் வேகவிடவும்.
·         சுண்ணாம்பு சத்து நிறைத்த கேழ்வரகு இட்டவி தயார்.


திங்கள், 5 ஆகஸ்ட், 2013

கேழ்வரகு




     கடந்த சிறுதானிய பதிவுகளில், தினை, வரகு, சாமை, குதிரைவாலி போன்ற சிறு சிறுதானியங்களைப் (Miner millet )பற்றி பார்த்தோம். இனி வரும் பதிவுகளில் பெறு சிறுதானியங்களைப்  (Major millet) பற்றி பார்க்கவிருக்கிறோம்.அந்த வரிசையில் முதல் இடம் பிடிப்பது, கேழ்வரகு, பார்பதற்கு கடுகு போல இருந்தாலும் அதன் வண்ணம் கேழ்வரகு என்று காட்டிகெ¡டுத்துவிடும்.
        கேழ்வரகை தானியத்தை மாவாக்கி, அதிலிருந்து உணவு தயரிப்பது வழக்கம். ஆனால் புழுங்கல் கேழ்வரகு அரிசியில் சோறு வடிக்கமுடியும், பிரியாணி செய்ய முடியும், தக்காளி சோறு செய்ய முடியும்.
        புழுங்கல் என்றதும் நினைவுக்கு வருகிறது, ´ரு தானியத்தை புழுங்கல் செய அந்த தானியத்தை 3 முதல் 6 மணி நேரம் ஊற விட வேண்டும். ஊறிய பிறகு அதனை பதமாக ஆவியில் வேகவிடவும். அதன் பிறகு வெயிலில் காயவைத்து எடுக்க வேண்டும். ஈரப்பதம் இல்லாமல் காயவைத்த தானியத்தை தேவையான போது அதன் தோல் உரியும் அளவுக்கு இயந்திரத்தில் அரைத்து சோறு சமைக்கலாம்.
        இவ்வாறு புழுங்கல் செய்யும் போது அந்த தானியத்தின் சத்து பாதுகாக்கப்படுகிரது. GI எனப்படும் கிளைசமிக் இன்டக்ஸ் குறைகிறது.அந்த தானியதின் தோலின் சக்தியும் அதன் அரிசியில் கிடைக்கிறது. கேழ்வரகையும் இவ்வாறு புழுங்கல் அரிசியாக்கும் போது அதன் உட்டச்சத்து பாதுகாக்கப்படுகிறது.
        40 வயதிற்க்கு மேல் மூட்டு சம்மந்தமான பிரச்சனை என்பது சாதாரனமாகிவிட்டது. குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் நிற்க்கும் தருவாயில் ஏற்படும் ஏலும்பு தெ¡டர்பான பிரச்சனைகளுக்கு சுண்ணாம்பு சத்து பற்றாக்குறை மிக முக்கிய காரணமாக அமைகிறது. அந்த வகையில் நாம் பல வகையான உணவுகளை ருசிக்கிறோம், நாம் உண்ணும் உணவுகளிலேயே அதிக அளவு சுண்ணாம்பு சத்துள்ள உணவு கேழ்வரகு தான். 100 கிராம் கேழ்வரகில் சுமார் 344 மில்லி கிராம் அளவிர்க்கு சுண்ணாம்பு (கால்சியம்) சத்து உள்ளது.
        இவ்வாரான கேழ்வரகை தெ¡டர்ந்து உண்ணும் போது உடல் இயக்கத்திற்கு தேவையான சுண்ணாம்பு சத்து கிடைக்கிறது. இது ஏலும்பு வளற்சிக்கும், பல் உறுதிக்கும், அரோகியமான இரத்த சிவப்பணுக்கள் ஏலும்பு மஜ்ஜையிலிருந்து உறுவாக துணைபுரிகிறது.சிறு வயதிலிருந்தே இவ்வகையான உணவுகளை உண்ணும் போது மூட்டு வலி, மூட்டு வீக்கம் போன்ற ஏலும்பு சார்ந்த நோய்கள் வருவதற்க்கான வாய்பு மிகவும் குறைவு.
       
கேழ்வரகு நார்சத்து உள்ள தானியம், நார் சத்து உடலின் சர்க்கரை அளவை  கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது, அதுமட்டுமல்லாமல் கெ¡ழுப்பை தடுக்கவும், குண்டானவர்கள் எடையை குறைக்கவும் கேழ்வரகு  ´ரு சிந்த உணவு மருந்தாகும். இதை உணர்ந்த சந்தை கேழ்வரகை மாவாகவும்,சேம்யாவாகவும், முறுக்காகவும் விற்பனை செய்கிறது.
கேழ்வரகு மாவிலிருந்து கூழ், களி, புட்டு, பக்கோடா, அடை, தோசை, பணியாரம், இட்லி, முறுக்கு, லட்டு போன்ற பதார்த்தங்களை எளிமையாக செய முடியும். குறிப்பாக களியில் கருப்பட்டியை பிசைந்து கெ¡டுத்தால் குழந்தைகள் ஆர்வத்துடன் உண்பர். உடலின் வெப்பத்தை சமநிலையை பேனுகிற தன்மை கேழ்வரகிற்கு உண்டு. இந்த கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்க கேழ்வரகு கூழுடன் மோர் கலந்து குடிக்கலாம், கூடவே சின்ன வெங்காயம் கடித்தால் அதன் சுவையே தனிதான்.
தாய்பாலுக்கு பிறகு கெ¡டுக்கப்பட வேண்டிய பால் கேழ்வரகு பால் தான். இதைத்தான் நம் முன்னோர்கள் செய்தனர். ஆனால் வழ்க்கை முறை மாற்றத்தின் காரணமாக இந்த பலக்கத்தை தெ¡டர்வதில் பலர் மறுக்கின்றனர். இந்த கேழ்வரகு பாலை பக்குவமாகவும், பதமாகவும் செய்வதில் கவணமாக இருந்தனர்.
நல்ல தரமான கேழ்வரகை 6 மணி நேரம் ஊர விட்டு பின் அதனை துணியில் மூட்டை கட்டி முளைகட்ட விடவும். நன்கு முளைகட்டிய கேழ்வரகை நிழலில் உளர்தி, அதை கையால் தேய்த்து புடைத்த்டுக்கவும். ஈரப்பதம் நீங்க காயவிட்டு மாவாக அரைத்தேடுக்கவும். நன்கு அரைத்த மாவை துணியில் தேய்த்து சலித்தேடுக்கவும். இது மிகவும் மெள்ளிய மாவாக கிடைக்கும். இந்த மாவில் 1 தேக்கரண்டி மாவுடன் 2 தம்ளார் தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கெ¡திக்கவிட்டு, ஆரிய பிறகு குழந்தைக்கு கெ¡டுக்கலாம். இது அரோகியமான நோயற்ற வாழ்வுக்கு அடித்தளமாக அமையும்.