புதன், 1 ஏப்ரல், 2020

ஆவாரை பூத்திருக்க...


"ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டீரோ" 
  “ ஆவாரை பூத்திருக்க சாவோரும் உண்டோ”
  “ ஆவாரை பூத்திருக்க சாவோர் யாரோ”
- நம் முது மொழி. 

ஆனால் ஆவாரை (Senna auriculata , syn.Cassia auriculata ) எவ்வளவு பூத்திருந்தாலும் நாம் அதை யாரும் முறையாக  உணவாக பயன்படுத்துவதில்லை. 
காணொளி நிகழ்ச்சிகளில் வந்த தகவல்களின் அடிப்படையில் திடீரென ஆவாரம் பூக்களைத் தேடி நீரிழிவு குறைபாடு உள்ளவர்கள் கூட்டம் கூட்டமாக செல்ல , தற்போது பச்சிலை கடைகளிலும் சாலை ஓரக் கடைகளிலும் ஆவாரம் பூக்கள் பச்சையாக (பறித்த ஓரிரு நாட்களிற்குள்) விற்கப்படுகின்றன. 
            பறித்த உலர்த்தப்படாத  புது ஆவாரம்   பூக்கள்  இனிப்பு,துவர்பு மற்றும் மிகக்குறைந்த அளவில் கைப்பும் கலந்த சுவையுடன் இருக்கும் . நிழலில் உலர்த்தி 6 மாதங்களுக்கு மேல் சேமித்து வைத்து ஆவாரம் பூக்கள் துவர்பு சுவையுடன் இருக்கும் . 
 ◦              தாமிர சத்து நிறைந்துள்ள ஆவாரையை  பூவும்,மொட்டுமாய் பறித்து காம்பு நீக்கி முறைப்படி (கோரை/மூங்கில்/ ஓலை பாய் அல்லது தூய வெண்நிற பருத்தித் துணியில்  நிழலில் உலரவைத்து)  காற்று புகும் வகையிலும் வெளிச்சம் புகாத வ்வையிலும் தகுந்த பருத்தி துணி/கூடை/சாடி களில் பத்திரப்படுத்தலாம். குறைந்தது ஆறு மாதம் கழித்து பயன்படுத்துவதால் ஆவாரைபூவில்  இருந்த கப மற்றும் பித்த விகார கழிவுகள் நீங்கி உடலுக்கு நன்மை பயக்கும்.இரண்டு ஆண்டுகள் கழித்து பயன்படுத்துவது மிகுந்த நற்குணங்களை கொண்டதாக இருக்கும். தற்காலத்தில் ஆவாரைக்கு மிகுந்த மருத்துவ பண்புகள் உள்ளதால் அதிகம் மருந்தாக பயன்படுத்தப் படுவதையே பார்க்கிறோம், ஆவாரம்பூக்களை உணவாக பயண்படுத்தப்படுவது அரிதாகி விட்டது. இங்கு , நாம் ஆவாரையை, உணவாக பயன்படுத்தும் முறைகளை மட்டும் பார்ப்போம்; 

அ. *(ஆவாரம்பூ மதுர பக்குவம்/ குல்கந்து)*: 
பறித்த ஆவாரம் பூக்களின்( உலர்த்தப்பட்ட பச்சை பூக்கள் )  *இதழ்கள்-100கிராம்,
*சுத்த தேன்- 300 கிராம், 
*நயம் பனங்கற்கண்டு -150 கிராம், 
*கருவா பட்டைதூள் - 1-1/2 கிராம் ,
*எலுமிச்சை சாறு  - 15 மி.லி. , 
    1. பனங் கற்கண்டுடன் சிறிது நீர் கலந்து கொதிக்கவைத்து , கல், மண் நீங்க முறைப்படி வடித்து மீண்டும் மிதமான தீயில் கொதிக்க விட்டு பூவை சேர்த்து கலந்து , அபோது இதழ்கள் சுருள துவங்கையில் அடுபிலிருந்து நீக்கவும்.
2. ஒரு பங்கு தேன் கலந்து அடுப்பிலேற்றி சிறு தீயில் கொதிக்க விட்டு அடுப்பிலிருந்து நீக்கவும்.
3. மீதமுள்ள இரண்டு பங்கு தேனையும் முன் செய்ததுபோல் ஒவ்வொறு பங்காக கலந்து  ,எலுமிச்சை சாறையும் சேர்த்து , ஓரிரு நிமிடங்களுக்குப்பின், பட்டைதூள் சேர்த்து, உடன் அடுப்பிலிருந்து நீக்கி , நன்கு குளிர்ந்ததும் , காற்று, மற்றும் வெளிச்சம் புகாத ஜாடிகளில் பத்திரபடுத்தவம். 
 (இது போல் ரோசா, செம்பரத்தை, வெண்தாமரை, செந்தாமரை, கொன்றை பூக்களிலும் மதுர பக்குவம்/ குல்கந்து செய்யலாம்)
 ஆறு மாதம் வரை பத்திரப்படுத்தி  அதன் பின் பயன்படுத்துவது நன்று ( பத்திரப்படுத்தும் காலத்தில் 2-3 நாட்களுக்கு ஒருமுறை தகுந்த அகப்பை/ கரண்டிகளால் நன்கு கிளறி விடுவது  அவசியம்)  .
ஆ.உலர்ந்த பூவை வெந்நீரில் ஊறவைத்து குழம்பு, துகையல் மற்றும் பாசிப்பருப்பு சேர்த்த கூட்டும்  செய்யலாம்.

இ.குடிநீர்(தேநீர்) செய்யலாம். 

ஈ.சாத பொடி செய்யலாம்.

உ. புளிகுழம்புகளில் பொடியாகவோ,ஊறவைத்தோ சேர்கலாம்.

ஊ. புழுங்களரிசி மற்றும், பாசிப்பருப்பு அல்லது பயருடன் , நீரில் ஊர வைத்த உலர்ந்த ஆவாரம் பூக்களை சேர்த்து முறப்படி மிளகு சீரகம் தாளிதம் செய்து கஞ்சி தயாரிக்கலாம்.

எ. முளை கட்ட உலர்த்தி அறைத்த காட்டுக் கம்பு மாவுடன் உலர்ந்த ஆவாரம் பூக்களை முறைப்படி வெந்நீரில் ஊர வைத்து , முறப்படி தகுந்த தாளித சரக்குகளுடன் தாளிதம் செய்து நன்கு பிசைந்து , முறைப்படி ரொட்டி செய்யலாம். சுவையாக இருப்பதுடன் , கம்பின் கப விகார தனமையை கட்டுப் படுத்தும், நீரிழிவு குறைபாடு உள்ளவர்களும், சளி உபாதை உள்ளவர்களும் இம்முறைப்படி செய்தகம்பு ரொட்டிகளை பயமின்றி உண்ணலாம்.
ஏ.கப கழிவுகளை நீக்க இப்பொடியை வெந்நீருடன் சாப்பிடலாம். 

குறிப்பு: சளி உபாதை உள்ளவர்கள் , கம்பங்கூழை உணவாக எடுத்துக் கொள்ளும் வேளைகளில் , ஆவாரம் பூ கூட்டை உபகறியாக பயன்படுத்துவதால் சளி உபாதைகள் மிகாமல் கட்டுக்குள் இருக்கும்.

“உணவில் ஆவாரை...  உடலில் புத்துயிர்... ”